​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கைதிகளுடன் இருளில் 4 மணி நேரம் காத்திருந்த போலீசார்

Published : Dec 13, 2019 11:56 AM

கைதிகளுடன் இருளில் 4 மணி நேரம் காத்திருந்த போலீசார்

Dec 13, 2019 11:56 AM

புதுச்சேரி நீதிமன்றத்தில் இருந்து கைதிகளை சிறைக்கு அழைத்துச்செல்ல கூடுதல் போலீசார் இல்லாத காரணத்தினால் 3 கைதிகளுடன் 4 மணிநேரம் வாகனத்தில் போலீசார் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

நேற்று மாலை 4 மணியளவில் இரட்டைகொலை வழக்கில் சிவா என்பவனுக்கு இரட்டை ஆயுள் தண்டணை விதிக்கப்பட்டது. அவனை சிறைக்கு கொண்டு செல்ல வேனில் ஏற்றியபோது, மற்ற விசாரணை கைதிகளான பாம் ரவி, ஆறுமுகம் ஆகியோரும் ஏற்றப்பட்டனர். அப்போது ஆயுதமின்றி இரண்டு போலீசார், ஒரு பெண் உதவி ஆய்வாளர் மட்டுமே இருந்தனர்.

போதிய பாதுகாப்பு இல்லை என வேனை எடுக்க ஓட்டுநரான ஏட்டு தசரதன் தயங்கி அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதனால் மின்சாரம் இல்லாத நிலையில் இருளில் 4 மணி நேரம் காத்திருந்தனர். இரவு 8 மணிக்கு கூடுதலாக 2 போலீசார் வந்தபின்பு வேன் புறப்பட்டுச் சென்றது.