​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தி ஊழல்-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Published : Dec 13, 2019 11:17 AM

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட் பயன்படுத்தி ஊழல்-மு.க.ஸ்டாலின் குற்றச்சாட்டு

Dec 13, 2019 11:17 AM

சென்னை மாநகராட்சியில் ஆற்றுமணலுக்குப் பதில் எம்-சாண்ட்-ஐ பயன்படுத்தியதன் மூலம் 1000 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பதாக குற்றம்சாட்டியுள்ள திமுக தலைவர் மு.க.ஸ்டாலின், அதுகுறித்து விரைந்து நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், சென்னை மாநகராட்சியில் நடைபெற்று வரும் மழைநீர்க்கால்வாய், நடைபாதை அமைக்கும் திட்டங்கள் உள்ளிட்டவற்றில் ஆற்றுமணல் பயன்படுத்தப்படுவதாக மதிப்பீடு கொடுக்கப்பட்டுவிட்டு, அதற்கு பதிலாக எம்.சாண்ட் பயன்படுத்தப்பட்டிருப்பதாக ஆய்வு ஒன்றில் தெரிய வந்திருப்பதாக கூறியுள்ளார்.

ஆற்றுமணலை விட எம்.சாண்ட் 50 சதவீதம் விலை குறைவு என தெரிவித்துள்ள ஸ்டாலின், இது தொடர்பாக உரிய விசாரணை நடத்தி சம்பந்தப்பட்டவர்கள் மீது தாமதமின்றி நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் லஞ்ச ஊழல் மற்றும் தடுப்புத் துறையை கேட்டுக் கொண்டுள்ளார்.