​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள பறவைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Published : Dec 13, 2019 10:13 AM



சூரத் அருகே வெளிநாடுகளிலிருந்து தஞ்சமடைந்துள்ள பறவைகள் கூட்டம்- பார்வையாளர்கள் மகிழ்ச்சி

Dec 13, 2019 10:13 AM

சைபீரியா, ரஷ்யா போன்ற நாடுகளில் இருந்து அதீதமான குளிர்காலங்களில் ஏராளமான பறவைகள் உணவும் நீரும் தேடி தெற்கு ஆசிய நாடுகளுக்கு பறந்து வருகின்றன.

அதில் ஒரு பிரிவு பறவைகள், குஜராத் மாநிலம் சூரத் அருகே உள்ள தபி (Tapi) ஆற்றுக்கு குடிபெயர்கின்றன. பிரவுன் நிற தலை கொண்ட பறவைகள் காண்போரை கவரும் வகையில் உள்ளன. பறவைகளை காண்பதற்காக ஏராளமானோர் ஆற்றங்கரைக்கு வருகின்றனர்.

இந்த ஆண்டு ஆயிரக்கணக்கில் பறவைகள் வந்துள்ளன. இவை கடந்த காலங்களை விட மிகவும் அதிக எண்ணிக்கையில் இருக்கின்றன. இந்த பறவைகளுக்கு மனிதர்களைக் கண்டால் அச்சமில்லை. மனிதர்கள் தரும் உணவை அவர்களின் கைகளில் இருந்தே உட்கொள்கின்றன.