​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கேமராவில் பதிவு செய்து கொண்டே ஸ்கேட்டிங்.. கார் கதவு திறக்கப்பட்டதால் விழுந்த வாலிபர்

Published : Dec 13, 2019 9:46 AM

கேமராவில் பதிவு செய்து கொண்டே ஸ்கேட்டிங்.. கார் கதவு திறக்கப்பட்டதால் விழுந்த வாலிபர்

Dec 13, 2019 9:46 AM

இங்கிலாந்தில் கேமராவில் பதிவு செய்து கொண்டே ஸ்கேட்டிங் செய்த இளைஞர், வழியில் திடீரென திறக்கப்பட்ட காரின் கதவின் மீது மோதி நிலை தடுமாறி கீழே விழுந்தார்.

பிரபல ஹிப்-ஹாப் பாடலுக்கு வாயசைத்தவாறு ஸ்கேட்டிங் செய்து கொண்டு, லண்டன் சாலையில் பயணிக்கும் அந்த இளைஞர், நவீன கேமரா மூலம் படமாக்கினார்.

காரில் தொத்திக் கொண்டும் சாலைகளில் வளைந்து வளைந்தும் சென்ற அந்த இளைஞர், சாலையின் ஓரத்தில் நிறுத்தப்பட்ட ஒரு காரின் கதவு திடீரென திறக்கப்பட அதில் இடித்து நிலைதடுமாறி அருகிலிருந்த சுவரின் மீது மோதினார். அதிர்ஷ்டவசமாக அவருக்கு காயங்கள் எதுவும் ஏற்படவில்லை.