​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள்

Published : Dec 13, 2019 8:12 AM

டர்பன் கடற்கரையில் டன் கணக்கில் மிதந்த பிளாஸ்டிக் கழிவுகள்

Dec 13, 2019 8:12 AM

தென் ஆப்பிரிக்காவிலுள்ள டர்பன் கடற்கரையில், டன் கணக்கிலான பிளாஸ்டிக் கழிவுகள் அலையில் மிதந்துவந்த வீடியோ சமூக வலைதளங்களில் வைரல் ஆகிவருகிறது.

பிளாஸ்டிக் குப்பைகளை மக்கள் முறையாக குப்பைத் தொட்டிகளில் போடாததால், அவை மழை நீரில் அடித்துவரப்பட்டு கடலில் கலந்து மிதக்கின்றன. சீறி எழும்பிவரும் அலைகளில் பிளாஸ்டிக் பாட்டில்கள் முண்டியடிப்பதுபோன்ற காட்சி, பிளாஸ்டிக் பயன்பாட்டின் அபாயத்தையும் விவரிக்கும் விதமாக அமைந்துள்ளது.

பிளாஸ்டிக் பயன்பாட்டை குறைத்து, குப்பைக் கழிவு மேலாண்மையில் தென் ஆப்பிரிக்க அரசு கூடுதல் கவனம் செலுத்தவேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.