​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் காட்டு யானைகள்- வாகன ஓட்டிகள் அச்சம்

Published : Dec 13, 2019 7:26 AM



சத்தியமங்கலம்-மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் நடமாடும் காட்டு யானைகள்- வாகன ஓட்டிகள் அச்சம்

Dec 13, 2019 7:26 AM

ஈரோடு மாவட்டம் சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் சுதந்திரமாக நடமாடும் காட்டுயானைகளால் வாகன ஓட்டிகள் அச்சம் அடைந்துள்ளனர்.

நேற்றிரவு சத்தியமங்கலம் அடுத்துள்ள பண்ணாரி அம்மன் கோவில் அருகே சத்தியமங்கலம் - மைசூர் தேசிய நெடுஞ்சாலையில் யானைகள் சாலையில் சுதந்திரமாக சுற்றி திரிந்தன. இதைக் கண்ட வாகன ஓட்டிகள் தங்களின் வாகனத்தை அப்படியே நிறுத்தி விட்டு அந்த யானைகளை அச்சத்துடன் பார்த்த வண்ணம் இருந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்து நிகழ்விடத்திற்குச் சென்ற வனத்துறையினர், யானைகள் நடமாடும் பகுதியில் வாகனங்களை மிகவும் மெதுவாக இயக்குமாறும், யானைகளின் அருகே ஹாரன் சத்தம் எழுப்பாமல் செல்லுமாறும் வாகன ஓட்டிகளிடம் அறிவுறுத்தி வருகின்றனர்.