​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை சட்டத் திருத்தம், யாருக்கும் பாதிப்பில்லை: பிரதமர்

Published : Dec 13, 2019 6:23 AM



குடியுரிமை சட்டத் திருத்தம், யாருக்கும் பாதிப்பில்லை: பிரதமர்

Dec 13, 2019 6:23 AM

குடியுரிமைச் சட்டம் தொடர்பான எதிர்க்கட்சிகளின் பொய்ப்பிரச்சாரத்தை நம்பி வன்முறையில் ஈடுபடக்கூடாது பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக்கொண்டுள்ளார். குடியுரிமைச் சட்டத்தால் யாருக்கும் பாதிப்பில்லை என்று கூறியிருக்கும் பிரதமர் நரேந்திர மோடி, மக்கள் அனைவரும் அமைதிக் காக்கும்படிக் கோரிக்கை விடுத்துள்ளார்.

குடியரிமை சட்டத்தில் கொண்டு வரப்பட்ட திருத்தம் வடகிழக்கு மாநில மக்களுக்கு எத்தகைய பாதிப்பையும் ஏற்படுத்தாது என்று மத்திய அரசு உறுதியளித்துள்ளது. ஆயினும் கடந்த மூன்று நாட்களாக அஸ்ஸாம், திரிபுரா உள்ளிட்ட சில மாநிலங்களில் கட்டுக்கடங்காத வன்முறை தலைவிரித்தாடுகிறது.

ராணுவம், துணை ராணுவம் மற்றும் மாநில காவல்துறையினர் கலவரக்காரர்களை கட்டுப்படுத்த படாத பாடு பட்டுக் கொண்டிருக்கின்றனர். கலவரம் காரணமாக அஸ்ஸாம் செல்லும் ரயில்கள், விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன.

இந்நிலையில் நாட்டு மக்கள் அமைதி காக்க கோரி பிரதமர் மோடி டிவிட்டரில் விடுத்த செய்தியில், அஸ்ஸாம் சகோதர சகோதரிகள் அச்சம் கொள்ளத்தக்க எந்த ஒரு அம்சமும் இந்த சட்டத்தில் இல்லை என்று உறுதியளித்துள்ளார். மக்களின் அடிப்படை உரிமைகளை தமது அரசு என்றும் பாதுகாக்கும் என்றும் மோடி தெரிவித்துள்ளார்.

முன்னதாக, ஜார்க்கண்ட் மாநிலத்தில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் பங்கேற்று பேசிய பிரதமர், சிறுபான்மை மக்களின் நலனுக்கு பாடுபடுவதாக கூறிய வாக்குறுதியை காங்கிரஸ் ஒரு போதும் நிறைவேற்றியது இல்லை என்றார்.

அசாம் உள்ளிட்ட எந்த மாநிலத்தையும் பாதிக்கும் எந்த முடிவையும் மத்திய அரசு எடுக்காது என்ற பிரதமர் நரேந்திர மோடி, மக்களின் சேவகனான தம்மை மக்கள் நம்ப வேண்டும் என்றார். வாக்கு வங்கி அரசியலைப்பற்றிய கவலை இல்லை என்ற பிரதமர், எப்போதும் மக்கள் நலனுக்காக உழைப்பதில் மட்டுமே நம்பிக்கை கொண்டுள்ளதாகவும், தெரிவித்தார்.