​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

Published : Dec 12, 2019 9:48 PM



பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிப்பு

Dec 12, 2019 9:48 PM

முன்னாள் பிரதமர் ராஜீவ்காந்தி கொலை வழக்கில் ஆயுள் தண்டனை பெற்று, சிறையில் இருந்த பேரறிவாளனுக்கு மேலும் 30 நாட்கள் பரோல் நீட்டிக்கப்பட்டுள்ளது.

உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ள அவரது தந்தையை கவனித்துக் கொள்வதற்காக ஒரு மாதம் பரோல் வழங்கப்பட்டு இருந்தது.

நாளையுடன் ஒரு மாதம் நிறைவடையும் நிலையில், மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டிக்க வேண்டும் என்று தமிழக அரசிடம் கோரிக்கை வைக்கப்பட்டு இருந்தது.

அதனை ஏற்று பேரறிவாளனுக்கு மேலும் ஒரு மாதம் பரோலை நீட்டித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. எந்த விதமான கூட்டத்திலும், நிகழ்ச்சியிலும் கலந்து கொள்ள கூடாது, ஊடகங்களுக்கு பேட்டி அளிக்க கூடாது போன்ற நிபந்தனைகளும் விதிக்கப்பட்டுள்ளன.