​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 40 ஆண்டுக்கு பின் நிரம்பும் தெப்பக்குளம்..!

Published : Dec 12, 2019 7:19 PM



ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு 40 ஆண்டுக்கு பின் நிரம்பும் தெப்பக்குளம்..!

Dec 12, 2019 7:19 PM

புகழ் பெற்ற மதுரை வண்டியூர் மாரியம்மன் கோயில் தெப்பக்குளத்தில், 40 ஆண்டுக்கு பிறகு முதன் முறையாக கால்வாய் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது.

304 மீட்டர் நீள, அகலம் கொண்ட அந்த தெப்பக்குளத்தில் ஆண்டு தோறும் தைப்பூசம் அன்று தெப்பத் திருவிழா நடைபெறுவது வழக்கம்.

image

சுரங்கக் குழாய்களின் மூலமாக வைகை நதி நீர் தெப்பத்திற்குள் வருமாறு முன்பு இணைப்பு அமைத்திருக்கின்றனர். கடந்த 40 வருடங்களாக தண்ணீர் வரும் கால்வாய் ஆக்கிரமிப்பு பிடியில் சிக்கியதால் வைகையாற்றில் இருந்து மோட்டார் மூலம் நிரப்பினர்.

தற்போது ஆக்கிரமிப்பு அகற்றப்பட்டு நீர் வரத்து கால் வாய் சீரமைக்கப்பட்டதை தொடர்ந்து, தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரத் தொடங்கியுள்ளது.

image

ஒபுளா படித்துறை அருகே புதிதாக தடுப்பணை கட்டப்பட்டு அதில் இருந்து தண்ணீர் கொண்டுவரப்பட்டு தெப்பக்குளம் நிரப்பப்படுகிறது.