​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 கிலோ மலைபாம்பை தைரியமாக கைகளால் பிடித்த பெண்மணி

Published : Dec 12, 2019 7:15 PM



20 கிலோ மலைபாம்பை தைரியமாக கைகளால் பிடித்த பெண்மணி

Dec 12, 2019 7:15 PM

கேரளாவில் பெண் ஒருவர் 20 கிலோ எடை கொண்ட மலைபாம்பை தைரியமாக கைகளால் பிடித்து, பையில் அடைத்த காட்சிகள் காண்போரை ஆச்சரியத்தில் ஆழ்த்தி உள்ளது.

அந்த மாநிலத்தின் எர்ணாகுளத்தில் தனது வீட்டின் பின்புறத்தில் புதரில் மறைந்திருந்த ஆளுயர மலைபாம்பை கண்ட வித்யா என்பவர் அக்கம் பக்கத்தினருடன் இணைந்து அதனை பிடிக்கும் முயற்சியில் இறங்கினார்.

புதரிலிருந்த பாம்பின் தலையை பயமின்றி அவர் கைகளால் பிடிக்க, உடனிருந்தவர்கள் அதன் வாலை பிடித்து  வெளியே இழுத்து வந்தனர்.

இதையடுத்து வித்யா, பாம்பை லாவகமாக சாக்கில் அடைத்தார்.  அவரது துணிச்சலான செயலுக்கு சமூக வலைதளங்களில் பாராட்டுக்கள் குவிந்த வண்ணம் உள்ளன.