​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருடன் என தவறுதலாக சிறுவன் கைது - இழப்பீடு வழங்க உத்தரவு

Published : Dec 12, 2019 7:01 PM

திருடன் என தவறுதலாக சிறுவன் கைது - இழப்பீடு வழங்க உத்தரவு

Dec 12, 2019 7:01 PM

வேளச்சேரி போலீசார் 17 வயது சிறுவனை செல்போன் திருடன் எனக்கூறி, தவறுதலாக கைது செய்து தாக்கிய விவகாரத்தில் 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு, மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.

கடந்த 2016 ஆம் ஆண்டு சென்னை கண்ணகி நகரில், 17 வயது சிறுவனை வேளச்சேரி போலீசார் சரவணகுமார் மற்றும் செந்தில்குமார் ஆகியோர் காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று, செல்போன் திருடன் என நினைத்து, தவறாக தாக்கியதாகக் கூறப்படுகிறது.

இதனால், சிறுவனுக்கு ஒரு காது கேட்காமல் போனதாகத் தெரிகிறது. இதுகுறித்து, வெளியான செய்தியை அடிப்படையாகக் கொண்டு மாநில மனித உரிமை ஆணையம் வழக்கு தொடர்ந்தது.

விசாரணையில் போலீசார் தவறு செய்தது உண்மை என நிரூபணமானதால், சிறுவனின் தாய் சுமதிக்கு, 2 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க தமிழக அரசுக்கு மாநில மனித உரிமை ஆணையம் உத்தரவிட்டுள்ளது.