​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்

Published : Dec 12, 2019 6:50 PM



கணவனை அடித்துக் கொன்று நாடகம் ஆடிய மனைவி சிக்கினார்

Dec 12, 2019 6:50 PM

நாகர்கோவில் அருகே கணவனை அடித்துக் கொன்று விட்டு நாடகம் ஆடிய மனைவி போலீசாரிடம் சிக்கினார்.

கரியமாணிக்கபுரத்தை சேர்ந்த ஐயப்பன்  தச்சு வேலை செய்து வந்தார். இவரது மனைவி கிருஷ்ணவேணி தனது கணவர் இறந்து கிடப்பதாக அழுது அக்கம் பக்கத்தினரை கூட்டியுள்ளார்.

தகவலறிந்து சென்ற போலீசார் தலையில் பலத்த காயங்களுடன் ஐயப்பனின் சடலத்தை மீட்டனர். ஆரம்பம் முதலே கிருஷ்ணவேணி மீது சந்தேகத்தில் இருந்த போலீசார், அவரிடம் விசாரித்த போது உண்மை வெளிச்சத்திற்கு வந்தது.

ஐயப்பன் தினமும் குடித்துவிட்டு மனைவியிடம் தகராறு செய்வது வழக்கம் எனக் கூறப்படுகிறது. இதே போன்று நேற்றும் ஐயப்பன் தகராறு செய்த போது, கோபம் அடைந்த கிருஷ்ணவேணி அருகில் இருந்த கட்டையை எடுத்து தலையில் அடித்துக் கொலை செய்து, பின்னர் நாடகம் ஆடியுள்ளார். அவரை போலீசார் கைது செய்தனர்.