​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
நித்தி வழக்கில் கர்நாடக அரசுக்கு இறுதி கெடு..!

Published : Dec 12, 2019 6:38 PM



நித்தி வழக்கில் கர்நாடக அரசுக்கு இறுதி கெடு..!

Dec 12, 2019 6:38 PM

சாமியார் நித்தியானந்தா எங்கு இருக்கிறார் என்பது குறித்து வரும் 18 ஆம் தேதிக்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும் என்று கர்நாடக அரசு மற்றும் காவல்துறைக்கு இறுதி கெடு விதித்து அம்மாநில உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

சாமியார் நித்தியானந்தா மீதான பாலியல் புகார் தொடர்பான வழக்கு விசாரணை கர்நாடகாவிலுள்ள ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

அந்த வழக்கு விசாரணையை வேறு நீதிமன்றத்திற்கு மாற்றக் கோரி நித்தியானந்தாவின் முன்னாள் சீடர் லெனின் கருப்பன் என்பவர் கர்நாடக உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.

அதில், வழக்கு விசாரணைக்காக 44 முறை வாய்தாவுக்கு நித்தியானந்தா ஆஜராகாத நிலையிலும், அவர் மீது எந்த நடவடிக்கையும் எடுக்க உத்தரவிடப்படவில்லை என்று லெனின் கருப்பன் குற்றம்சாட்டியிருந்தார்.

ஒரே ஒரு முறை வாய்தாவுக்கு ஆஜராக தன் மீது நீதிமன்றம் பிடிவாரன்ட் பிறப்பித்துள்ளதையும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

அந்த வழக்கில், நித்தியானந்தா எங்கு இருக்கிறார், என்ன செய்து கொண்டிருக்கிறார் போன்ற விவரங்களை வரும் 12 ஆம் தேதிக்குள் அறிக்கையாக அளிக்க வேண்டும் என்று கர்நாடக அரசுக்கும், காவல்துறைக்கும் நீதிபதி உத்தரவிட்டிருந்தார்.

ஆனால் இன்று வழக்கு விசாரணைக்கு வந்த போது, கர்நாடக அரசு மற்றும் காவல்துறை தரப்பில் அறிக்கை எதுவும் தாக்கல் செய்யப்படவில்லை.

இதனால் கடும் அதிருப்தி அடைந்த நீதிபதி, நித்யானந்தா தொடர்பான அறிக்கையை வரும் 18 ஆம் தேதிக்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்று இறுதி கெடு விதித்து உத்தரவிட்டார்.

அறிக்கை தாக்கல் செய்ய தவறினால் கடும் நடவடிக்கை எடுக்க உத்தரவிட நேரிடும் என்றும் நீதிபதி எச்சரிக்கை விடுத்தார். மேலும் ராம்நகர் மாவட்ட நீதிமன்றத்தில் நடைபெற்று வந்த நித்யானந்தா வழக்கு விசாரணைக்கும் நீதிபதி தடை விதித்தார். வழக்கு விசாரணை வரும் 18 ஆம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.