​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர்

Published : Dec 12, 2019 5:19 PM

பந்துவீசிய வேகத்திலேயே கேட்ச் பிடித்த நெய்ல் வாக்னர்

Dec 12, 2019 5:19 PM

ஆஸ்திரேலியாவிற்கு எதிரான டெஸ்ட் போட்டியில், நியூசிலாந்து வீரர் நெய்ல் வாக்னர் (Neil Wagner) ஒரே கையில் பிடித்த கேட்ச் ரசிகர்களை ஆச்சரியத்தில் ஆழ்த்தியுள்ளது.

ஆஸ்திரேலியாவின் பெர்த் மைதானத்தில் நேற்று துவங்கிய போட்டியில், டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது.

போட்டியின் ஆறாவது ஓவரை வீசிய நெய்ல் வாக்னரின் பந்தை வார்னர் தரைக்கு சற்றே மேலாக நேராக அடித்தபோது, தன்னை நோக்கி வந்த பந்தை பந்து வீசிய வேகத்திலேயே தரையோடு தரையாக சறுக்கி, கண்ணிமைக்கும் நேரத்தில் நெய்ல் வாக்னர் ஒரே கையில் பிடித்து அசத்தியுள்ளார்.