​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த குடோனிற்கு சீல்

Published : Dec 12, 2019 4:40 PM



சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்த குடோனிற்கு சீல்

Dec 12, 2019 4:40 PM

திருச்சியில் சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரித்து வந்த குடோனுக்கு உணவு பாதுகாப்பு அதிகாரிகள் சீல் வைத்தனர்.

திருச்சி தேவதானம் பகுதியில்  வடமாநிலத்தை சேர்ந்த 20க்கும் மேற்பட்டோர் ஒரு வீட்டில் குடோன் அமைத்து பானிபூரி தயாரித்து பிற வியபாரிகளுக்கு சப்ளை செய்து வந்துள்ளனர்.

இதற்கிடையே சுகாதாரமற்ற முறையில் பானிபூரி தயாரிப்பதாக புகார் எழுந்த நிலையில் அங்கு சென்ற உணவு பாதுகாப்பு அதிகாரி சித்ரா தலைமையிலான குழு பானிபூரி தயாரிக்கும் குடோனை சோதனையிட்டனர்.

அப்பொழுந்து அழுகிய நிலையில் உருளைக்கிழங்குகள், வண்டுக்கள் நிறைந்த மைதா உள்ளிட்ட உணவுப்பொருட்களை பார்த்த அதிகாரிகள் உடனடியாக குடோனிற்கு சீல் வைத்தனர்.