​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குழந்தையின்மை சிகிச்சை அளிப்பதாக பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

Published : Dec 12, 2019 3:50 PM



குழந்தையின்மை சிகிச்சை அளிப்பதாக பெண்ணிடம் பாலியல் அத்துமீறல்

Dec 12, 2019 3:50 PM

சென்னை கீழ்ப்பாக்கத்தில், குழந்தையின்மைக்கு சிகிச்சை அளிப்பதாகக் கூறி, பெண்ணை பாலியல் பலாத்காரம் செய்ய முயன்ற சித்த மருத்துவர் கைது செய்யப்பட்டார்.

கார்டன் காலனி பகுதியில், சித்த மருத்துவ கிளினிக் நடத்தி வந்த அண்ணாதுரை என்பவரிடம், ஒரு தம்பதியினர், 6 மாதமாக குழந்தையின்மைக்கான சிகிச்சை பெற்றனர்.

இந்தநிலையில், புதிய மருந்து கிடைத்திருப்பதாக கூறி அந்தப் பெண்ணை இரவு நேரத்தில் வரவழைத்து, பாலியல் அத்துமீறலில் அண்ணாதுரை ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது.

இதுகுறித்து, காவல் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டநிலையில், போலீசார் அங்கு வருவதற்குள் அண்ணாதுரை தப்பியோடிவிட்டார். வழக்குப்பதிவு செய்த கீழ்ப்பாக்கம் மகளிர் போலீசார், தலைமறைவாக இருந்த அண்ணாதுரையை கைது செய்தனர்.