​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அந்தியூர் கோவிலில் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவான சிசிடிவி காட்சியால் பக்தர்கள் பரவசம்

Published : Dec 12, 2019 2:52 PM



அந்தியூர் கோவிலில் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவான சிசிடிவி காட்சியால் பக்தர்கள் பரவசம்

Dec 12, 2019 2:52 PM

ஈரோடு மாவட்டம் அந்தியூர் கோவிலில், நடை சாத்தப்பட்ட பின்பு ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவான சிசிடிவி காட்சிகளால் பரவசம் அடைந்ததாக பக்தர்கள் தெரிவித்துள்ளனர்.

கார்த்திகை தீபத்தன்று அந்தியூரில் உள்ள பத்ரகாளியம்மன் கோயிலில் வழிபாடு முடிந்து இரவில் நடை சாத்தப்பட்டது. அதன்பிறகு கருவறையில் ஊஞ்சல் ஆடுவது போன்று சத்தம் கேட்டதாக அப்பகுதி மக்கள் தெரிவித்தனர்.

இதையடுத்து கோயில் செயல் அலுவலர் சரவணன் அன்றைய தினம் பதிவான சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தார். அப்போது அதில், கருவறை முன்பு உள்ள திரையில் வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் ஊஞ்சல் ஆடுவது போன்று பதிவாகி இருப்பது தெரிய வந்துள்ளது.

சுமார் 2 மணி நேரம் இந்த காட்சி தெரிவதாகவும், இது அம்மன் ஊஞ்சல் உற்சவ காட்சி போல் இருப்பதாகவும் பக்தர்கள் பரவசத்துடன் தெரிவித்தனர்.