​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லியில் மீண்டும் அதிகரித்தது காற்று மாசு

Published : Dec 12, 2019 1:42 PM

டெல்லியில் மீண்டும் அதிகரித்தது காற்று மாசு

Dec 12, 2019 1:42 PM

காற்று மாசு மீண்டும் அதிகரித்துள்ளதால், டெல்லி மக்களுக்கு  மத்திய சுகாதார அமைச்சகம் முன்னெச்சரிக்கை அறிவிப்பை வெளியிட்டுள்ளது.

கடந்த சில நாள்களாக காற்று மாசு குறைந்திருந்ததால் மக்கள் நிம்மதியடைந்திருந்தனர். இந்நிலையில், காற்று வீசுவது குறைந்திருப்பதாலும், தட்பவெப்ப நிலையில் சாதகமின்மையாலும் டெல்லியில் மீண்டும் காற்று மாசு அதிகரித்துள்ளது.

இதனால் கடந்த 2 மாதங்களில் 12ஆவது முறையாக மத்திய சுகாதார அமைச்சகம் டெல்லி மக்களுக்கு உடல்நிலை முன்னெச்சரிக்கை குறித்த அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதில்,  உடல்நலம் பாதிக்கப்பட்டோர், வெளியில் நடமாடுவதை தவிர்க்கும்படி சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது.