​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விராட் கோலி உலக தரத்திலான பேட்ஸ்மேன்: பொலார்ட் புகழாரம்

Published : Dec 12, 2019 11:44 AM

விராட் கோலி உலக தரத்திலான பேட்ஸ்மேன்: பொலார்ட் புகழாரம்

Dec 12, 2019 11:44 AM

இந்திய கிரிக்கெட் அணி கேப்டன் விராட் கோலியை உலக தரத்திலான பேட்ஸ்மேன் (World class batsman) என்று வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொலார்ட் புகழ்ந்துள்ளார்.

மும்பையில் நேற்று நடைபெற்ற 3ஆவது இருபது ஓவர் போட்டியில் 67 ரன்கள் வித்தியாசத்தில் வென்று, இந்திய அணி தொடரை கைப்பற்றியது.

இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய பொலார்ட், கோலியை உலக தரத்திலான பேட்ஸ்மேன் என்றும், எதிரணியின் மோசமான பந்துவீச்சை விளாசி எப்படி ரன்களை குவிப்பது என்பதை நன்கு அறிந்தவர் என்றும் பாராட்டினார்.

3ஆவது 20 ஓவர் போட்டியில் 240 ரன்களை இந்தியா குவித்ததை சுட்டிக்காட்டிய பொலார்ட், மிகப்பெரிய அந்த இலக்கை அடைவது சாத்தியமில்லாத ஒன்று என்றும் தெரிவித்தார்.