​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மருத்துவக்கல்லூரி பணிகளை தொடங்க வலியுறுத்தி 24 மணி நேர முழு கடையடைப்பு

Published : Dec 12, 2019 10:16 AM

மருத்துவக்கல்லூரி பணிகளை தொடங்க வலியுறுத்தி 24 மணி நேர முழு கடையடைப்பு

Dec 12, 2019 10:16 AM

நாகையில் மருத்துவக்கல்லூரி கட்டுமானப்பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி வணிகர்களின் 24 மணி நேர முழு கடையடைப்பு நடைபெற்று வருகிறது.

நாகையில் புதிய மருத்துவக் கல்லூரிக்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்து அதற்கான இடம் தேர்வு செய்யப்பட்டு பூர்வாங்க பணிகள் தொடங்கப்பட உள்ளன. இந்நிலையில் இக் கல்லூரியை மயிலாடுதுறையில் அமைக்க அப்பகுதி மக்கள் போராடி வருகின்றனர்.

இதனால் திட்டமிட்டபடி நாகையில் மருத்துவக்கல்லூரி பணிகளை உடனடியாக தொடங்க வலியுறுத்தி இந்த கடை அடைப்பு நடைபெறுகிறது.
முழு அடைப்புக்கு ஆதரவாக தனியார் பேருந்துகள், வாடகை வேன்கள், கார்கள், ஆட்டோக்களும் ஓடாததால் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது.

மேலும் வேதாரண்யம் உள்ளிட்ட 25க்கும் மேற்பட்ட கிராம மீனவர்களும் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்.இதற்கிடையே வர்த்தகர்கள், அனைத்து கட்சியினர், மாணவ மாணவிகள், வழக்கறிஞர்கள், பொதுமக்கள் என ஆயிரக்கனக்கானோர் பேரணியாக சென்று ஆட்சியர் பிரவீன் நாயரை சந்தித்து, மனு அளித்தனர்.

.