​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
20 பேரை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை

Published : Dec 12, 2019 8:13 AM



20 பேரை தாக்கிய சிறுத்தையை சுட்டுகொன்ற வனத்துறை

Dec 12, 2019 8:13 AM

குஜராத் மாநிலம் அமரேலி அருகே 20 பேரை தாக்கி கொன்ற சிறுத்தையை வனத்துறையினர் சுட்டுக் கொன்றனர்.

கடந்த சில மாதங்களாக  கால்நடைகளை கடித்து குதறிய அந்த சிறுத்தை, கிராமவாசிகள்மீதும் தாக்குதல் நடத்தியதால் தனியாக நடமாட அச்சம் கொண்டிருந்தனர். இந்நிலையில், அதே பகுதியில் மாட்டுத் தொழுவம் அருகே யூகலிப்டஸ் தோப்பில் சிறுத்தை பதுங்கியிருந்ததை கண்ட கிராமமக்கள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். சிறுத்தையை உயிருடன் பிடிக்க முயன்ற வனத்துறையினர், இருள்சூழ்ந்ததால் சுட்டுக் கொன்றனர். அப்பகுதியில் நடமாடிய  சிறுத்தைகள் சிலவற்றை வனப்பகுதிக்குள் விரட்டியதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.