​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கொலம்பியாவில் மனித உரிமை நாளையொட்டி மாபெரும் பேரணி

Published : Dec 11, 2019 1:22 PM

கொலம்பியாவில் மனித உரிமை நாளையொட்டி மாபெரும் பேரணி

Dec 11, 2019 1:22 PM

கொலம்பியா தலைநகர் பொகோட்டாவில் மனித உரிமை நாளையொட்டி பேரணியாக சென்ற ஆயிரக்கணக்கான பொதுமக்கள் மீது, போலீசார் கண்ணீர் புகை குண்டு வீசி அவர்களை கலைத்தனர்.

கொலம்பியா அதிபர் இவான் டியூக்கின் சமூக மற்றும் பொருளாதார சீர்திருத்தத்துக்கு எதிராக பொதுமக்கள் கடந்த நவம்பர் மாதம் முதல் போராடி வருகின்றனர். போராட்டத்தின் ஒரு பகுதியாக, மனித உரிமை நாளையொட்டி, பொகோட்டாவில் நடைபெற்ற பேரணியில், பல்லாயிரக் கணக்கானோர் பங்கேற்று அரசுக்கு எதிராக கோஷங்களை எழுப்பி தங்களது எதிர்ப்பை வெளிப்படுத்தினர். அப்போது அவர்கள் மீது போலீசார் தாக்குதல் நடத்தினர்.