​​ தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்ற சர்ச்சையால் குடியரசுத் தலைவர் அதிருப்தி
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்ற சர்ச்சையால் குடியரசுத் தலைவர் அதிருப்தி

Published : May 05, 2018 4:50 PM

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்ற சர்ச்சையால் குடியரசுத் தலைவர் அதிருப்தி

May 05, 2018 4:50 PM

தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் நடைபெற்ற சம்பவங்கள் குறித்து, பிரதமர் அலுவலகத்துக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தனது அதிருப்தியை வெளிப்படுத்தியுள்ளதாக கூறப்படுகிறது.

டெல்லியில் கடந்த 3ஆம் தேதி நடைபெற்ற தேசிய திரைப்பட விருதுகள் வழங்கும் விழாவில் 11 கலைஞர்களுக்கு மட்டுமே குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் விருதுகளை நேரடியாக வழங்கினார். இந்த விவரம் தங்களுக்கு கடைசி நேரத்தில் தெரிவிக்கப்பட்டதாகக் கூறி, சுமார் 55 கலைஞர்கள் விருது வழங்கும் விழாவை புறக்கணித்தனர்.

பதவியேற்றது முதலே ஒரு மணி நேரத்துக்கு மேல் எந்தவொரு நிகழ்ச்சியிலும், குடியரசுத் தலைவர் பங்கேற்கமாட்டார் என்ற நிலை கடைபிடிக்கப்படும் நிலையில், இது குறித்து கலைஞர்களுக்கு முன்கூட்டியே ஏன் தகவல் தெரிவிக்கவில்லை என்று குடியரசுத் தலைவர் மாளிகை, பிரதமர் அலுவலகத்தை தொடர்பு கொண்டு கேட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.