​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க கமல்ஹாசன் வலியுறுத்தல்

Published : Dec 11, 2019 7:56 AM



இலங்கைத் தமிழர்கள், முஸ்லீம்களுக்கு குடியுரிமை வழங்க கமல்ஹாசன் வலியுறுத்தல்

Dec 11, 2019 7:56 AM

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை சட்டத்திருத்த மசோதாவில் இனப் படுகொலைகளால் பாதிக்கப்பட்டிருக்கும் இலங்கை தமிழர்களுக்கு குடியுரிமை வழங்க வேண்டும் என்று மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் வலியுறுத்தியுள்ளார்.

இது குறித்து டிவிட்டரில் பதிவு ஒன்றை வெளியிட்டுள்ள கமல்ஹாசன், இலங்கையின் தமிழர்களும் முஸ்லீம்களும் ஏன் இந்த மசோதாவில் சேர்க்கப்படாமல் நீக்கப்பட்டுள்ளனர் என்று அரசுக்கு கேள்வி எழுப்பியுள்ளார்.

இது வாக்கு வங்கிக்காக கொண்டு வரப்பட்ட மசோதா அல்ல என்றால், இலங்கைத் தமிழர்களும் முஸ்லீம்களும் இணைக்கப்படாதது ஏன் என்று கமல்ஹாசன் ட்விட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்.