​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
துப்பாக்கியால் சுட்ட 2 மர்ம நபர்கள் - ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

Published : Dec 11, 2019 7:50 AM

துப்பாக்கியால் சுட்ட 2 மர்ம நபர்கள் - ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் உயிரிழப்பு

Dec 11, 2019 7:50 AM

அமெரிக்காவின் நியு ஜெர்சியில் இரண்டு பேர் துப்பாக்கியால் சுட்டதில் ஒரு போலீஸ்காரர் உள்பட 4 பேர் உயிரிழந்தனர். 

மன்ஹாட்டன் பகுதியில் ஹட்சன் ஆற்றங்கரையோரம் அமைந்துள்ள பல்பொருள் அங்காடியில் இரண்டு பேர் துப்பாக்கியுடன் நுழைந்து சரமாரியாக சுட்டனர். இதனால் அருகில் இருந்த பள்ளிகள் உடனடியாக மூடப்பட்டன. அப்பகுதியில் போலீசார் குவிக்கப்பட்டனர்.

போலீசாருக்கும் துப்பாக்கி ஏந்திய 2 மர்ம நபர்களுக்கும் இடையே கடும் துப்பாக்கிச் சண்டை நீடித்தது.இரண்டு பேரும் சுட்டுக் கொல்லப்பட்ட பின்னர் கட்டுப்பாடுகள் தளர்த்தப்பட்டு நியு ஜெர்சி இயல்பு நிலைக்கு திரும்பியது. இச்சம்பவம் குறித்து அதிபர் டிரம்ப் வேதனை தெரிவித்து பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு இரங்கல் தெரிவித்தார்.