​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது - கிஷண்ரெட்டி

Published : Dec 11, 2019 7:41 AM

ராமர் கோவில் விவகாரத்தில் உச்சநீதிமன்ற உத்தரவை நிறைவேற்றும் கடமை மத்திய அரசுக்கு உள்ளது - கிஷண்ரெட்டி

Dec 11, 2019 7:41 AM

உச்சநீதிமன்ற உத்தரவுப்படி, ராமர் கோவில் கட்டுவதற்கு 3 மாதத்துக்குள் அறக்கட்டளை அமைப்பதற்கான கடமை மத்திய அரசுக்கு இருப்பதாக உள்துறை இணை அமைச்சர் கிஷண்ரெட்டி தெரிவித்தார்.

இதுதொடர்பாக மக்களவையில் எழுப்பப்பட்ட கேள்விக்கு பதில் அளித்த அவர், அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பில், ராமர் கோவில் கட்டவும், அயோத்தி நகர மேம்பாட்டுக்காகவும் ஒரு அறக் கட்டளை அமைக்க வேண்டும் என்ற உத்தரவும் உள்ளது என்று கூறினார்.

அறக்கட்டளைக்கு அறங்காவலர்களை நியமிப்பது, அவர்களது அதிகாரம், அறக்கட்டளைக்கு நிலத்தை மாற்றுவது உள்பட இதர பணிகளை நிறைவேற்றுமாறு மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதாக கூறிய கிஷண்ரெட்டி, அந்த உத்தரவை அதே காலவரையறைக்குள் நிறைவேற்ற வேண்டிய கடமை மத்திய அரசுக்கு இருக்கிறது என்றார். அதன்படி, 3 மாத காலத்திற்குள் அறக்கட்டளை அமைக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்தார்.