​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?

Published : Dec 10, 2019 8:43 PM



பரிசலில் சென்று மணல் கொள்ளை... தடுக்குமா மாவட்ட நிர்வாகம் ?

Dec 10, 2019 8:43 PM

ஈரோடு மாவட்டம் பவானி அருகே காவிரி ஆற்றில் நூதன முறையில் அரங்கேறும் மணல் கொள்ளையை தடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது. 

காவிரி நீர்ப்பிடிப்புப் பகுதிகளில் மழையின் அளவு குறைந்ததால் மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவும் குறைந்துள்ளது. இதனையடுத்து அணையிலிருந்து பாசனத்துக்கும் குடிநீருக்கும் என்று மட்டும் குறைந்த அளவு நீர் திறக்கப்படுகிறது.

காவிரி ஆற்றில் மணல் அள்ள கடந்த 2 ஆண்டுகளாக தடை அமலில் இருக்கிறது. ஆனால் பவானியை அடுத்த அம்மாபேட்டை காடப்பநல்லூர் பகுதியில் சிலர் பரிசலில் ஆற்றின் நடுப்பகுதி வரை சென்று, தண்ணீரில் மூழ்கி வாளி மூலம் மணலை அள்ளி பரிசலில் நிரப்பி கரைக்கு கொண்டு வருகின்றனர். கரைக்கு கொண்டு வரும் மணலை அங்கேயே சலித்து, வெளிமாவட்டங்களுக்கு விற்பனைக்கு அனுப்புவதாகக் கூறப்படுகிறது.

பட்டப்பகலில் நடைபெற்று வரும் இந்த மணல் கொள்ளை குறித்து பவானி வட்டாட்சியர் பெரியசாமியிடம் கேட்டபோது, ஆற்றில் மணல் அள்ள யாருக்கும் அனுமதி அளிக்கவில்லை என்றும், சம்மந்தப்பட்ட பகுதிக்கு அதிகாரிகளை அனுப்பி ஆய்வு செய்து நடவடிக்கை எடுப்பதாகவும் கூறினார்.