​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி சி48-ராக்கெட்

Published : Dec 10, 2019 5:16 PM

விண்ணில் பாய தயாராகும் பிஎஸ்எல்வி சி48-ராக்கெட்

Dec 10, 2019 5:16 PM

பூமியை கண்காணிக்கும் செயற்கைகோளுடன் பிஸ்எல்வி சி 48 ராக்கெட் நாளை விண்ணில் ஏவப்பட உள்ளது.

இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோ, பிஎஸ்எல்வி - சி 48 ராக்கெட்டை நாளை விண்ணில் செலுத்த இருக்கிறது. அதற்கான 24 மணி நேர கவுன்ட்டவுன் பிற்பகல் 1.25 மணிக்கு தொடங்கியது. ஆந்திர மாநிலம் ஸ்ரீஹரிகோட்டாவில் உள்ள சதீஷ் தவான் விண்வெளி ஆய்வு மையத்தில் உள்ள 1-வது ஏவுதளத்தில் இருந்து,நாளை பிற்பகல் 3.25 மணியளவில் ராக்கெட் விண்ணில் செலுத்தப்பட இருக்கிறது.

தயாரிக்கப்பட்டுள்ள ரிசாட் 2 பிஆர்1 என்ற செயற்கை கோளை, ராக்கெட் சுமந்து செல்ல இருக்கிறது. மேலும், வணிக ரீதியில் அமெரிக்காவின் 6 செயற்கைகோள்கள், இத்தாலி, இஸ்ரேல், ஜப்பான் ஆகிய நாடுகளின் தலா ஒரு செயற்கைகோள்கள் என மொத்தம் 10 செயற்கை கோள்கள் செலுத்தப்பட உள்ளன.

628 கிலோ எடை கொண்ட ரிசாட் 2 பிஆர்1 செயற்கைகோள், பூமியில் இருந்து 576 கிலோ மீட்டர் தொலைவிலான குறைந்த சுற்றுவட்டப்பாதையில் செலுத்தப்பட உள்ளது. 5 ஆண்டுகள் ஆயுட்காலம் கொண்ட அந்த செயற்கைகோளில் உள்ள நவீன ரேடார் மூலம் துல்லியமாக பூமியை படம் பிடிக்க முடியும் என்பதால் இந்தியாவின் பாதுகாப்பு துறை கண்காணிப்புக்கு பெரும் வலு சேர்ப்பதாக இருக்கும்.

மேலும் அதன் வாயிலாக கிடைக்கும் தரவுகள் வேளாண்மை, பேரிடர் மேலாண்மை போன்ற பயன்பாட்டிற்கும் உதவிகரமாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. ராக்கெட் ஏவப்பட்ட 16 நிமிடத்திற்குப் பின் செயற்கைகோள்கள் ஒவ்வொன்றாக பிரியத் தொடங்கும். 21 நிமிடங்களுக்குள் அந்த செயல்பாடுகள் முழுவதும் நிறைவடைந்து விடும். நடப்பு ஆண்டில் இஸ்ரோவின் 6வது திட்டம் இதுவாகும்.

இதனிடையே, திருப்பதி ஏழுமலையான் கோவிலில் சாமி தரிசனம் செய்த பின் இஸ்ரோ தலைவர் பேசிய சிவன், ராக்கெட்டை விண்ணில் செலுத்துவதற்கான அனைத்து பணிகளும் வழக்கம்போல் நடைபெற்று வருகிறது என்றார்.

இது பிஎஸ்எல்வி வகை ராக்கெட்டின் 50-வது திட்டம் மற்றும் ஸ்ரீஹரிகோட்டாவிலிருந்து ஏவப்படும் 75வது ராக்கெட் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்தது எனவும் அவர் தெரிவித்தார்.