​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்ற சிலி விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் : சிலி விமானப்படை

Published : Dec 10, 2019 4:45 PM

அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்ற சிலி விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் : சிலி விமானப்படை

Dec 10, 2019 4:45 PM

அண்டார்டிகாவுக்கு 38 பேருடன் சென்ற சிலி நாட்டு சரக்கு விமானம் விபத்தில் சிக்கியிருக்கலாம் என்று அந்நாட்டு விமானப்படை தெரிவித்துள்ளது.

சான்டியாகோவில் இருந்து  தளவாட பொருள்களுடன் புறப்பட்ட சி- 130 ஹெர்குலிஸ்  விமானம் (C130 Hercules), பன்டா ஏரேனாஸுக்கு (Punta Arenas) முதலில் சென்றது.

பின்னர் அங்கிருந்து  திங்கள்கிழமை மாலை 4. 55 மணிக்கு அண்டார்டிகாவில் உள்ள சிலி நாட்டின் தளத்துக்கு விமானம் புறப்பட்டது.

அதில் 17 சிப்பந்திகள் உள்ளிட்ட 38 பேர் பயணித்த நிலையில், சுமார் 1 மணி நேரத்தில் தகவல் தொடர்பு துண்டிக்கப்பட்டு மாயமானது. இதையடுத்து அதை தேடும் பணி நடைபெறுகிறது.

இந்நிலையில், அண்டார்டிகா செல்லும் வழியில் விமானம் விபத்தில் சிக்கி விழுந்திருக்கலாம் என சிலி விமானப்படை தெரிவித்துள்ளது.