​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த நயன்தாரா

Published : Dec 10, 2019 3:36 PM



திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வருகை தந்த நயன்தாரா

Dec 10, 2019 3:36 PM

நடிகை நயன்தாரா இயக்குனர் விக்னேஷ் சிவனுடன் இணைந்து  திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

நேற்று கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலுக்கு சென்ற நிலையில், இன்று காலையில் திருச்செந்தூர் முருகன் கோவிலுக்கு வந்த அவர்கள் இருவரும், பேட்டரி கார் மூலம் கோவிலுக்கு அழைத்து செல்லப்பட்டனர்.

அதையடுத்து மூலவர் சுப்ரமணிய சுவாமி மற்றும் சண்முகர் சன்னதிகளில் இருவரும் சுவாமி தரிசனம் செய்தனர். இதனிடையே இந்த தகவல் வெளியே பரவ கோவில் முன்பு திரண்ட பொதுமக்கள் மற்றும் பக்தர்கள், முண்டியடித்து கொண்டு செல்போன்களில் அவர்களை படம் பிடித்தனர்.