​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பொருளாதாரத்தை பங்குச்சந்தை விளையாட்டாக கருதுகிறதா மத்திய அரசு? - சிவசேனா கேள்வி

Published : Dec 10, 2019 1:03 PM

பொருளாதாரத்தை பங்குச்சந்தை விளையாட்டாக கருதுகிறதா மத்திய அரசு? - சிவசேனா கேள்வி

Dec 10, 2019 1:03 PM

நாட்டில் பொருளாதார சரிவு ஏற்பட்டுள்ள நிலையில் அது குறித்து நிபுணர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதை காது கொடுத்து கேட்க மத்திய அரசு மறுப்பதாக சிவ சேனா குற்றம்சாட்டி உள்ளது.

சிவ சேனாவின் அதிகாரப்பூர்வ பத்திரிகையான சாம்னாவில் வெளியான தலையங்கத்தில் இந்திய பொருளாதாரத்தை, ஒரு பங்கு சந்தை விளையாட்டாக மத்திய அரசு கருதுகிறதா என கேள்வி எழுப்பப்பட்டு உள்ளது. பிரதமர் அலுவலகத்தில் குவிக்கப்பட்டுள்ள அதிகாரம், எந்த அதிகாரமும் இல்லாத மத்திய அமைச்சர்கள் உள்ளிட்டவற்றின் காரணமாக பொருளாதாரம் நலிவடைந்து, வளர்ச்சி மந்தகதியில் போய்க் கொண்டிருக்கிறது என்ற ரிசர்வ் வங்கி முன்னாள் ஆளுநர் ரகுராம் ரஞ்சனின் கருத்தை ஆமோதிப்பதாக சிவசேனா கூறியுள்ளது.