​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து சட்டப் போராட்டம் இனி உச்சநீதிமன்றத்தில் நடத்தப்படும்

Published : Dec 10, 2019 11:41 AM

குடியுரிமை சட்ட திருத்த மசோதா குறித்து சட்டப் போராட்டம் இனி உச்சநீதிமன்றத்தில் நடத்தப்படும்

Dec 10, 2019 11:41 AM

குடியுரிமை திருத்த சட்ட மசோதா, அரசியலமைப்புக்கு எதிரானது என்பதால் அது குறித்த சட்டப்போராட்டம் இனி உச்ச நீதிமன்றத்தில் நடத்தப்படும் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப சிதம்பரம் கூறி உள்ளார்.

பாகிஸ்தான், வங்கதேசம் மற்றும் ஆப்கானிஸ்தானில் இருந்து வந்த இந்து, சீக்கிய, புத்த, ஜெயின், பார்சி மற்றும் கிறித்தவர்களுக்கு  சட்டபூர்வ குடியுரிமை அளிக்கும் மசோதா மக்களவையில் நிறைவேற்றப்பட்டுள்ளது. இது குறித்து டுவிட்டரில் கருத்து தெரிவித்துள்ள சிதம்பரம், இந்த மசோதாவை நிறைவேற்றியதன் மூலம்  எம்.பி.க்கள் தங்களது பொறுப்புகளை வழக்கறிஞர்களுக்கும், நீதிபதிகளுக்கும்  தாரை வார்த்து விட்டனர் என்று விமர்சித்துள்ளார்.

பாரதீய ஜனதா கட்சிக்கு முரட்டுத் தனமான பெரும்பான்மையை அளித்ததன் பலனாக, அந்தக் கட்சி நாட்டு மக்களின் விருப்புக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது என்றும் சிதம்பரம் காட்டமாக கூறி உள்ளார்.