​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கிரிக்கெட் விளையாட்டின் போது மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பீதி

Published : Dec 10, 2019 8:53 AM

கிரிக்கெட் விளையாட்டின் போது மைதானத்தில் ஊர்ந்து சென்ற பாம்பால் பீதி

Dec 10, 2019 8:53 AM

ரஞ்சிக்கோப்பைத் தொடருக்கான போட்டிகள் நடந்து கொண்டிருந்த போது மைதானத்தில் பாம்பு ஊர்ந்து சென்றதால் ஆட்டம் நிறுத்தப்பட்டது.

விஜயவாடா மைதானத்தில் நடந்த இந்தப் போட்டியில் ஆந்திரபிரதேசம் - விதர்பா அணிகள் மோதின. இந்த போட்டி தொடங்குவதற்கு முன் நடுவர்கள் மைதானத்திற்கு வந்தனர். அப்போது அவர் அங்கு மைதானத்தின் நடுவே பாம்பு ஒன்று ஊர்ந்து சென்று கொண்டிருந்தது. இதனைக் கண்டு நடுவர்கள் அதிர்ச்சியடைந்தனர்.

இதன் காரணமாக ஆட்டம் சிறிது நேரம் நிறுத்தப்பட்டது. பாம்பினை விரட்டியடிக்க வீரர்களும் முயன்றனர். அடுத்த சில நொடிகளில் பாம்பு அங்கிருந்து வெளியேறியது. இந்த நிகழ்வு குறித்து பிசிசிஐ தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளது.