​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
370 சட்டப்பிரிவு ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை

Published : Dec 10, 2019 7:34 AM

370 சட்டப்பிரிவு ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீது இன்று விசாரணை

Dec 10, 2019 7:34 AM

ஜம்மு-காஷ்மீரில் சட்டப்பிரிவு 370-ஐ ரத்து செய்ததற்கு எதிராக தாக்கல் செய்த மனுக்களை உச்சநீதிமன்றத்தின் 5 நீதிபதிகள் அடங்கிய அரசியல் சாசன அமர்வு இன்று விசாரிக்கிறது.

ஜம்மு-காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்தை அளிக்கும் சட்டப்பிரிவை ரத்து செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பல்வேறு தரப்பில் மனுக்கள் தாக்கல்செய்யப்பட்டிருந்தன. இந்த மனுக்கள் மீது இடைக்கால உத்தரவை பிறப்பிக்க மறுத்த உச்சநீதிமன்றம், அனைத்து மனுதாரர்களின் வாதங்களைக் கேட்ட பிறகே உத்தரவுகள் பிறப்பிக்கப்படும் என்று தெரிவித்தது.

இந்நிலையில், நீதிபதி என்வி ரமணா தலைமையில் நீதிபதிகள் எஸ்.கே.கவுல், சுபாஷ் ரெட்டி, பி.ஆர்.கவாய் மற்றும் சூர்யகாந்த் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் இன்று வழக்கு விசாரணைக்கு வருகிறது.