​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கோல்டன் குளோப் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியானது

Published : Dec 10, 2019 7:21 AM

கோல்டன் குளோப் விருதுகளுக்கான இறுதிப்பட்டியல் வெளியானது

Dec 10, 2019 7:21 AM

கோல்டன் குளோப் திரைப்பட விருதுகளுக்கான போட்டி இறுதிச் சுற்றுக்கு தகுதி பெற்ற 5 படங்கள், 5 நட்சத்திரங்கள், 5 இயக்குனர்கள் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

2020ம் ஆண்டு ஜனவரி 5ம் தேதி லாஸ் ஏஞ்சலஸ் நகரில் உள்ள பெவல்ரி ஹில்டன் நட்சத்திர ஓட்டலில் கோல்டன் குளோப் விருதுகள் வழங்கப்படுகின்றன. இந்நிலையில் 77வது கோல்டன் குளோப் விருதுகளுக்காக இறுதி பரிந்துரைகளின் பட்டியல் வெளியாகியுள்ளது.

இதில் வெற்றி பெறும் படங்கள் ஆஸ்கர் விருதுக்கு தகுதி பெறுவதும் வழக்கம். இந்த ஆண்டு வெளியான படங்களில் ராபர்ட் டி நீரோ,( robert de nero) அல் பாகினோ,( al pacino) ஜோ பெஸ்கி ( joe bescky) நடித்துள்ள the irishman படம் கவனத்தை ஈர்த்துள்ளது. அத்துடன் மேரேஜ் ஸ்டோரி( marriage story), 1917 , the two popes படங்களுடன் வசூலை வாரிக் குவித்த ஜோக்கர் படமும் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

மேரேஜ் ஸ்டோரிக்கு மொத்தம் 6 பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளன. அடுத்ததாக மார்ட்டின் ஸ்கார்சசி ( martin scorsese) என்ற திரைப்பட மேதையின் ஐரிஷ்மேன் படத்திற்கும் once upon a time படத்திற்கும் தலா 5 நடுவர்கள் பரிந்துரை செய்துள்ளனர்.

சிறந்த நடிகைகளுக்கான போட்டியில் மேரேஜ் ஸ்டோரியில் நடித்த ஸ்கார்லட் ஜோகன்சன் முன்னிலை வகிக்கிறார். சார்லிஸ் தெரான் , ரீனி ஜவல்கர் போன்ற பிரபல நடிகைகளும் போட்டியில் உள்ளனர்.

சிறந்த நடிகர்களுக்கான போட்டியில் ஜோக்கர் படத்தில் நடித்த ஜாக்குயின் பீனிக்ஸ் , அந்தோனியோ பாண்டரிஸ், கிறிஸ்டியன் பேல், ஆடம் டிரைவர் ஆகியோர் பரிந்துரைக்கப்பட்டனர். அனிமேட்டட் பட வரிசையில் frozen 2 , the lion king ,tou story 4, missing link, how to train your dragon ஆகிய படங்கள் போட்டியிடுகின்றன.

சிறந்த இயக்குனர்கள் பட்டியலில் ஜோக்கர் படத்தை இயக்கிய todd philips, ஐரிஷ்மேன் படத்தை இயக்கிய matin scorsese. 1917 படத்தை இயக்கிய சாம் மென்டஸ், பாரசைட் படத்தை இயக்கிய பாங்-ஜூன் -ஹோ ஆகியோரும் ஒன்ஸ் அபன் எ டைம் இன் ஹாலிவுட்டை இயக்கிய quentino வும் போட்டியிடுகின்றனர்.

சிறந்த வெளிநாட்டு படம், சிறந்த இசை அல்லது நாடகம் சார்ந்த முழுநீளப்படம், உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளிலும் பரிந்துரைக்கப்பட்ட பெயர்கள் அறிவிக்கப்பட்டுள்ளன. சிறந்த துணை நடிகர், நடிகை, இசையமைப்பாளர், திரைக்கதையாசிரியர் போன்றவிருதுகளுக்கான இறுதிப் பட்டியல் வெளியாகியுள்ளது.