​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
தற்காப்புக்காக பெண்கள் பெப்பர் ஸ்பிரே வாங்குவது அதிகரிப்பு

Published : Dec 10, 2019 7:16 AM



தற்காப்புக்காக பெண்கள் பெப்பர் ஸ்பிரே வாங்குவது அதிகரிப்பு

Dec 10, 2019 7:16 AM

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் அதிகரித்துவரும் நிலையில் பெண்கள் தங்களை தாங்களே தற்காத்துக் கொள்ள தற்காப்புக் கலைகள் உதவுகின்றன.

இதனை கருத்தில் கொண்டு மிளகாய்ப் பொடி தூவி எதிரியை எதிர்கொள்வது முதல் கராத்தே மூலம் அவனை அடித்து சாய்ப்பது வரை பெண்களுக்கு பல்வேறு தற்காப்ப பயிற்சிகள் வழங்கப்படுகின்றன.

கொல்கத்தாவில் இரண்டு பயிற்சி வகுப்புகள் நடத்தப்பட்டன. இதில் நூற்றுக்கும் மேற்பட்ட பெண்கள் கலந்துக் கொண்டு தற்காப்பு பயிற்சிகளைப் பெற்றனர். பெண்கள் தற்காப்புக்கான பொருட்களை வாங்குவதும் அதிகரித்துள்ளது. சந்தைகளில் பெப்பர் ஸ்பிரே போன்ற பொருட்களை வாங்குவதில் பெண்கள் ஆர்வம் காட்டுகின்றனர். இது போன்ற பொருட்களின் ஆன்லைன் விற்பனை அதிகரித்து வருவதாகவும் அமேசான் நிறுவனம் தெரிவித்துள்ளது.