​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
குற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா?

Published : Dec 09, 2019 9:27 PM

குற்றப்பத்திரிக்கை குறிப்பிட்ட காலத்திற்குள் தாக்கல் செய்யப்படுகிறதா?

Dec 09, 2019 9:27 PM

குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படுகிறதா? என்பதை  குற்றவியல் துறை இயக்குனர் கண்காணிக்க வேண்டுமென உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.

வழிபறி வழக்கில் ஜாமீன் கோரி மதுரையைச் சேர்ந்த சித்திரைவேல் என்பவர் தாக்கல் செய்த மனு நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் முன்பு  விசாரணைக்கு வந்தது. அப்போது, குற்றவழக்குகளில் தாமதமாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுவதால், குற்றவாளிகளுக்கு விரைவில் ஜாமீன் கிடைத்து விடுவதாகவும், இதனால், நீதித்துறை மீதான மக்களின் நம்பிக்கையை இழக்க நேரிடுவதாகவும் அதிருப்தி தெரிவித்தார்.

மேலும், குறிப்பிட்ட காலத்திற்குள் குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்படுகிறதா? என்பதை குற்றவியல் துறை இயக்குநர் கண்காணிக்கவும் உத்தரவிட்டு, ஜாமின் மனுவையும் நீதிபதி தள்ளுபடி செய்தார்.