​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஜாக்குவார் லேண்ட் ரோவர் மொத்த விற்பனை 3.4 சதவீதம் சரிவு

Published : Dec 09, 2019 6:00 PM

ஜாக்குவார் லேண்ட் ரோவர் மொத்த விற்பனை 3.4 சதவீதம் சரிவு

Dec 09, 2019 6:00 PM

சொகுசு கார்களை தயாரிக்கும் ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனத்தின் வாகன விற்பனை 3.4 சதவீதம் சரிவடைந்துள்ளது.

டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் ஒரு அங்கமான அந்த நிறுவனம் பிரிட்டனை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. மும்பை பங்குச்சந்தையில் டாடா மோட்டார்ஸ் தாக்கல் செய்த அறிக்கையில், ஜாக்குவார் லேண்ட் ரோவர் நிறுவனம் கடந்த நவம்பர் மாதம் விற்பனை செய்த வாகனங்களின் எண்ணிக்கை குறித்த விவரங்கள்  இடம்பெற்றுள்ளன.

அதன்படி நவம்பரில் மொத்தம் 11 ஆயிரத்து 464 ஜாக்குவார் கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளன. கடந்த ஆண்டுடன் ஒப்பிடும் போது விற்பனை 23 சதவீதம் சரிவடைந்துள்ளது. அதே சமயம் லேண்ட் ரோவர் கார்கள் விற்பனை ஐந்தரை சதவீதம் உயர்ந்துள்ளது. மொத்தம் 35 ஆயிரத்து 78 கார்கள் விற்பனை செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.