​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அடகு கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துக் கொள்ளை முயற்சி

Published : Dec 09, 2019 4:23 PM

அடகு கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துக் கொள்ளை முயற்சி

Dec 09, 2019 4:23 PM

செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூர் அருகே அடகு கடைக்குள் துப்பாக்கியுடன் நுழைந்துக் கொள்ளை அடிக்க முயன்ற கும்பலை சிசிடிவி காட்சி அடிப்படையில் போலீசார் தேடி வருகின்றனர்.

காயார் அடுத்துள்ள நெல்லிக்குப்பத்தில் விமல் சந்த் ஜெயின் என்பவர் அடகு கடை நடத்தி வருகிறார். நேற்றிரவு கைக்குட்டையால் முகத்தை மறைத்தப்படி இங்கு சென்ற மூன்று பேர் கொண்ட கும்பல் துப்பாக்கியை காண்பித்து மிரட்டி கொள்ளை அடிக்க முயன்றுள்ளது.

சாதுரியமாகச் செயல்பட்ட அடகு கடைக்காரர் பாதுகாப்பு ஒலி பெருக்கி பொத்தானை அழுத்தியுள்ளார். இதனால் ஒலி பெருக்கி சத்தம் எழுப்பவே பதற்றம் அடைந்த கொள்ளையர்கள் அங்கிருந்து தப்பியோடினர்.

அவர்கள் வைத்திருந்தது நிஜ துப்பாக்கியா ? அல்லது டம்மி துப்பாக்கியா ? என விசாரணை நடத்தி வரும் காயார் போலீசார் கொள்ளை கும்பலை வலைவீசி தேடி வருகின்றனர்.