​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை - சவுதி அரேபிய அரசு

Published : Dec 09, 2019 1:37 PM



உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் கட்டாயமில்லை - சவுதி அரேபிய அரசு

Dec 09, 2019 1:37 PM

சவுதி அரேபியாவில் உள்ள உணவகங்களில் நீடித்து வந்த ஆண்கள், பெண்களுக்கான தனித்தனி நுழைவாயில் முறை முடிவுக்கு வந்துள்ளது.

இளவரசர் முகமது பின் சல்மான் பதவியேற்றதிலிருந்து அங்கு பெண்களுக்கான கட்டுப்பாடுகள் படிப்படியாக நீக்கப்பட்டு வருகிறது. கால் பந்தாட்ட மைதானத்தில் நடக்கும் போட்டிகளை பார்வையிடவும், கார்களை இயக்கவும் பெண்களுக்கு அனுமதி அளிக்கப்பட்டது .

இந்நிலையில் உணவகங்களில் தனித்தனி நுழைவாயில் முறை கட்டாயமில்லை என அந்நாட்டு நகராட்சிகள் மற்றும் ஊரக விவகாரங்கள் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது.

சவுதியில் உள்ள உணவகங்களில் பெண்கள் மற்றும் குடும்பத்துடன் வரும் ஆண்கள் செல்வதற்கென ஒரு வழியும், தனியாக வரும் ஆண்கள் செல்வதற்கு ஒரு வழியும் கடைபிடிக்கப்பட்டு வருகிறது. தற்போது வெளியிடப்பட்டுள்ள அறிவிப்பால் இந்த முறை முடிவுக்கு வருகிறது. அதேசமயம் உணவகத்திற்குள் பிரிக்கப்பட்டுள்ள இருக்கை பகுதிகளும் அகற்றப்படுமா என்பது குறித்து தெரிவிக்கப்படவில்லை.