​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வன்முறையற்ற தேசத்தை உருவாக்க காவல்துறைக்கு பிரதமர் வலியுறுத்தல்

Published : Dec 09, 2019 11:10 AM



வன்முறையற்ற தேசத்தை உருவாக்க காவல்துறைக்கு பிரதமர் வலியுறுத்தல்

Dec 09, 2019 11:10 AM

நாட்டில் உள்ள பெண்கள், குழந்தைகள் தாங்கள் பாதுகாப்பாக இருக்கிறோம் என்ற உணர்வை அவர்களிடம், காவல்துறை கண்டிப்பாக உறுதி செய்ய வேண்டும் என பிரதமர் நரேந்திர மோடி அறிவுறுத்தியிருக்கிறார்.

புனேவில் கடந்த 6ஆம் தேதி தொடங்கி நடைபெற்ற காவல்துறை டிஜிபிக்கள், ஐஜிக்கள் மாநாட்டின் இறுதிநாள் நிகழ்வில் பங்கேற்று உரையாற்றிய பிரதமர் இதனை தெரிவித்திருக்கிறார்.

பெண்கள், குழந்தைகளிடம் மட்டுமின்றி, சமூகத்தின் அனைத்து தரப்பு மக்களிடையிலும், குறிப்பாக, ஏழை-எளிய, அடித்தட்டு மக்களிடம் பாதுகாப்பு உணர்வை உறுதி செய்வதில் காவல்துறை இடைவிடாது பணியாற்ற வேண்டும் என பிரதமர் மோடி கூறியிருக்கிறார்.

இந்திய தேசத்தை பாதுகாப்பான தேசமாக மாற்றுவதிலும், வன்முறைகளற்ற நாடாக உருவெடுப்பதிலும், காவல்துறையின் பங்கு மிக முக்கியமானது என்று குறிப்பிட்ட பிரதமர் நரேந்திர மோடி, தேச நலனை கருத்தில் கொண்டு, அதனை எல்லா நேரத்திலும் உறுதிப்படுத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.