​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
ஊரக உள்ளாட்சித் தேர்தல் - திமுக கூட்டணி மீண்டும் முறையீடு

Published : Dec 09, 2019 10:42 AM

ஊரக உள்ளாட்சித் தேர்தல் - திமுக கூட்டணி மீண்டும் முறையீடு

Dec 09, 2019 10:42 AM

ரக உள்ளாட்சி பதவிகளுக்கு அறிவிக்கப்பட்டுள்ள தேர்தலை எதிர்த்து, திமுக மற்றும் அதன் கூட்டணி சார்பில், உச்சநீதிமன்றத்தில், புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்த மனு நாளை மறுநாள் விசாரணைக்கு வருகிறது.

ஊராக உள்ளாட்சி பதவிகளுக்கு, இம்மாதம் 2ஆம் தேதி இரண்டு கட்டங்களாக தேர்தல் அறிவிக்கப்பட்டது. இதை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில் திமுக மனுத் தாக்கல் செய்தது. இதன் மீது வியாழக்கிழமையன்று விசாரணை நடத்திய உச்சநீதிமன்றம், வெள்ளிக்கிழமையன்று தீர்ப்பளித்தது.

அதில், 9 மாவட்டங்கள் தவிர, மற்ற மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தலை நடத்தலாம் என, தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்திற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது.

இதையடுத்து, ஏற்கனவே வெளியிட்ட அறிவிப்பாணையை திரும்ப பெற்ற தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம், ஊரக உள்ளாட்சிப் பதவிகளுக்கான தேர்தல் தேதியை சனிக்கிழமையன்று அறிவித்தது.

இந்நிலையில், ஊரக உள்ளாட்சித் தேர்தலை எதிர்த்து, உச்சநீதிமன்றத்தில், திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் சார்பில், இன்று, புதிய மனுத் தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அதில், உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை பின்பற்றாமல் மாநில தேர்தல் ஆணையம் தேர்தலை அறிவித்து விட்டதாக கூறப்பட்டுள்ளது.

தீர்ப்பைப் பின்பற்றி இட ஒதுக்கீடு மற்றும் வார்டு மறுவரையரை பணிகளை முடித்த பின்னரே தேர்தலை நடத்த, மாநில தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவிட வேண்டும் என்றும் மனுவில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

திமுக மற்றும் அதன் கூட்டணி கட்சிகளின் புதிய மனுவை ஏற்றுக் கொண்டிருக்கும் உச்சநீதிமன்றம், அதன்மீது, நாளை மறுநாள் புதன்கிழமையன்று விசாரணை நடைபெறும் என அறிவித்திருக்கிறது.