​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணை குழு அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு

Published : Dec 09, 2019 10:09 AM



பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர்: சிறப்பு விசாரணை குழு அமைத்து தெலங்கானா அரசு உத்தரவு

Dec 09, 2019 10:09 AM

ஹைதராபாத் பாலியல் குற்றவாளிகள் என்கவுன்ட்டர் தொடர்பாக விசாரிப்பதற்காக சிறப்பு விசாரணை குழுவை அமைத்து தெலங்கானா அரசு உத்தரவிட்டுள்ளது.

ஹைதராபாத்தில் பெண் கால்நடை மருத்துவரை பாலியல் வன்கொடுமை செய்து எரித்துக் கொன்ற விவகாரத்தில் கைதான 4 பேர், விசாரணையின் போது காவல்துறையினரை தாக்கிவிட்டு தப்ப முயன்றதால் என்கவுன்ட்டரில் சுட்டுக் கொல்லப்பட்டனர். இது தொடர்பாக ஏற்கனவே தேசிய மனித உரிமைகள் ஆணைய அதிகாரிகள், விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இந்நிலையில் தெலங்கானா அரசும் ராச்சகொண்டா காவல் ஆணையர் மகேஷ் எம் பாகவத் தலைமையில் சிறப்பு விசாரணைக் குழு ஒன்றை அமைத்துள்ளது. என்கவுன்ட்டருக்கு எதிராக உச்சநீதிமன்றத்திலும் சில மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.