​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
டெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது

Published : Dec 09, 2019 7:57 AM

டெல்லி தீ விபத்து: தலைமறைவாக இருந்த கட்டட உரிமையாளர் கைது

Dec 09, 2019 7:57 AM

டெல்லியில் நடைபெற்ற தீ விபத்தில் 43 பேர் பலியான சம்பவம் தொடர்பாக அந்த வீட்டின் உரிமையாளரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.

டெல்லியின் வடக்குப்பகுதியில், ராணி ஜான்சி சாலையில், அனாஜ் மண்டி என்ற சந்தை பகுதியில் நேற்று அதிகாலை ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 43 பேர் பலியாகினர்.இதுதொடர்பாக நடைபெற்ற முதல் கட்ட விசாரணையில் மின்கசிவு காரணமாக விபத்து நேரிட்டதாக கூறப்படுகிறது.

மேலும் தீயணைப்பு துறையிடம் இருந்து தடையில்லா சான்றிதழ் வாங்காமலும், போதிய பாதுகாப்பு கருவிகள் இல்லாமலும் அந்த ஆலை செயல்பட்டு வந்திருப்பதும் தெரிய வந்துள்ளது.

இந்த நிலையில் தீவிபத்தில் 43 பேரை பலிகொண்ட, அடுக்குமாடி கட்டிட உரிமையாளரான ரேஹான் மற்றும் மேலாளர் பர்கான் ஆகியோரை டெல்லி போலீசார் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். ரேஹான் மீது, கொலைக்குற்றம் அல்லாத, மரணம் விளைவிக்கும் பிரிவின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது.