​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ரூ.400 கோடியில் இஸ்ரோ திட்டம்

Published : Dec 09, 2019 7:32 AM



செயற்கைக்கோள்களைப் பாதுகாக்க ரூ.400 கோடியில் இஸ்ரோ திட்டம்

Dec 09, 2019 7:32 AM

இந்திய செயற்கைக்கோள்களை பாதுகாப்பதற்கான திட்டத்திற்கு 33 கோடியே 30 லட்சம் ரூபாயை மத்திய அரசு வழங்குகிறது.

விண்வெளி குப்பைகளிலிருந்தும், விண்கற்கள் உள்ளிட்ட இதர அபாயங்களிலிருந்தும் இந்திய செயற்கைக் கோள்கைகளை காப்பாற்ற நேத்ரா என்ற திட்டத்தை 400 கோடி ரூபாயில் இஸ்ரோ செயல்படுத்துகிறது. இந்த திட்டத்துக்கு மானியம் வழங்குவதற்காக அண்மையில் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்ற ஒப்புதலைப் பெற்றார்.

கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகள் மேற்கொண்ட விண்வெளி ஆராய்ச்சிகளின் விளைவாக பூமியின் சுற்றுவட்டப்பாதையில் பழைய செயற்கைக்கோளின் பாகங்கள் உள்ளிட்ட குப்பைகள் அதிக அளவில் உருவாகியிருப்பதால், செயல்பாட்டில் உள்ள செயற்கைக்கோள்களுக்கு அச்சுறுத்தலாக உருவெடுத்துள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவிக்கின்றனர்.