​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்..!

Published : Dec 09, 2019 6:25 AM



வேட்புமனுத் தாக்கல் இன்று தொடக்கம்..!

Dec 09, 2019 6:25 AM

மிழகத்தில் 27 மாவட்டங்களில் வருகிற 27 மற்றும் 30ந் தேதி ஊரக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறுவதையொட்டி, அதற்கான வேட்புமனுத் தாக்கல் இன்று தொடங்குகிறது.

உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான வழக்கில் தீர்ப்பளித்த உச்சநீதிமன்றம், தமிழகத்தில் புதிதாக பிரிக்கப்பட்ட 9 மாவட்டங்களைத் தவிர்த்து இதர மாவட்டங்களில் உள்ள ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்குத் தேர்தல் நடத்தலாம் என உத்தரவிட்டது.

இதன் அடிப்படையில், உள்ளாட்சித் தேர்தல் தொடர்பாக ஏற்கெனவே வெளியிட்ட அறிவிப்பாணையை ரத்து செய்த மாநில தேர்தல் ஆணையம், புதிய தேர்தல் அறிவிப்பை நேற்று முன்தினம் வெளியிட்டது.

அதன்படி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, வேலூர், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களைத் தவிர்த்து 27 மாவட்டங்களில், வரும் 27, 30 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாகத் தேர்தல் நடைபெற உள்ளது.

இத்தேர்தலில் போட்டியிட விரும்புவோர் இன்றுமுதல் வேட்பு மனுவைத் தாக்கல் செய்யலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.மனு தாக்கல் செய்ய, வருகிற 16ந் தேதி கடைசி நாளாகும். ஜனவரி 2ந் தேதி வாக்குகள் எண்ணப்படும். தேர்வான உறுப்பினர்கள் பதவியேற்பு ஜனவரி 6ந் தேதி நடைபெற உள்ளது.