​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை

Published : Dec 08, 2019 6:53 PM

கர்நாடகாவில் 15 தொகுதி இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணிக்கை

Dec 08, 2019 6:53 PM

கர்நாடகா சட்டப்பேரவையில் 15 தொகுதிகளுக்கு நடைபெற்ற இடைத் தேர்தலில் பதிவான வாக்குகள் நாளை எண்ணப்படவுள்ளன.

கடந்த 5ம் தேதி நடைபெற்ற தேர்தலில்  67 புள்ளி 91 சதவீத வாக்குகள் பதிவாகின. இந்த வாக்குகளை எண்ணும் பணி, 11 மையங்களில் நாளை நடைபெறவுள்ளது.

காலை 8 மணிக்கு தொடங்கி வாக்கு எண்ணிக்கை  நடைபெறவுள்ளது. முன்னணி நிலவரம் பிற்பகலுக்குள் தெரிய வந்துவிடும். கர்நாடகத்தில் ஆட்சியிலிருக்கும் எடியூரப்பா தலைமையிலான பாஜக அரசு தனிபெரும்பான்மை பெற 6 இடங்கள் தேவைப்படுகின்றன.

ஆதலால் இந்த தேர்தல் முடிவு, எடியூரப்பா அரசுக்கு முக்கியமானதாக கருதப்படுகிறது. இதுகுறித்து பேட்டியளித்த எடியூரப்பா, குறைந்தது 13 தொகுதிகளில் பாஜக வெற்றி பெறும் என்று நம்பிக்கை தெரிவித்தார்.