​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
உள்ளாட்சித் தேர்தல் - திமுக தீர்மானம்

Published : Dec 08, 2019 6:52 PM

உள்ளாட்சித் தேர்தல் - திமுக தீர்மானம்

Dec 08, 2019 6:52 PM

உள்ளாட்சித் தேர்தல் நடத்தும் விவகாரத்தில் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தை கண்டித்து திமுக மாவட்ட செயலாளர்கள், எம்.பிக்கள் மற்றும் எம்எல்ஏக்கள் கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

சென்னையில் திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களில், உள்ளாட்சித் தேர்தல்கள் நடத்தப்படாமல் இழுத்தடித்துக் கொண்டிருப்பதற்கு மாநிலத் தேர்தல் ஆணையமும், அதிமுக அரசுமே முழுப் பொறுப்பேற்க வேண்டும் எனவும், உச்சநீதிமன்றத்தின் உத்தரவுகளைப் புறக்கணித்திடும் வகையில்,  புதிய தேர்தல் அறிவிப்பை வெளியிட்டுள்ள மாநிலத் தேர்தல் ஆணையத்தின் அலட்சியமான நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவிப்பதாகவும் கூறப்பட்டுள்ளது.

உச்சநீதிமன்றத் தீர்ப்பின் அடிப்படையில், வார்டு மறுவரையறை மற்றும் இடஒதுக்கீடு ஆகியவற்றை முழுமையாகச் செய்து முடித்த பிறகே தேர்தலை நடத்தக்கோரி மீண்டும் நீதிமன்றத்தை நாட வேண்டுமென்ற மு.க.ஸ்டாலின்  கருத்தை ஒரு மனதாக ஏற்றுக் கொள்வதாகவும்,  உள்ளாட்சி மன்றத் தேர்தல் எப்போது வந்தாலும் நேரெதிரே சந்தித்து, புதியதொரு  சரித்திரம் படைத்திட தி.மு.க. தயாராக இருப்பதாகவும் தீர்மானத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.