​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
அரை ஆண்டை நிறைவு செய்த ஹாங்காங் போராட்டத்தையொட்டி பிரம்மாண்ட அணிவகுப்பு

Published : Dec 08, 2019 6:17 PM



அரை ஆண்டை நிறைவு செய்த ஹாங்காங் போராட்டத்தையொட்டி பிரம்மாண்ட அணிவகுப்பு

Dec 08, 2019 6:17 PM

ஹாங்காங் அரசுக்கு எதிராக பொதுமக்கள் நடத்தி வரும் தொடர் போராட்டம், பாதி ஆண்டை நிறைவு செய்திருப்பதை ஒட்டி போராட்டக்காரர்கள் பங்கேற்ற பிரம்மாண்ட அணிவகுப்பு நடைபெற்றது.

காவல்துறையின் அனுமதி பெற்று, சிவில் மனித உரிமைகள் முன்னணி என்ற அமைப்பின் சார்பில் இந்த பேரணிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இந்த அமைப்பு கடந்த ஜூலை மாதத்தில் வன்முறையற்ற இருவேறு மிகப்பெரும் அமைதிப் போராட்டங்களை நடத்தியது என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பேரணி சீர்குலைக்க திட்டமிட்டதாக 11 பேரை கைது செய்த ஹாங்காங் காவல்துறையினர், அவர்களிடமிருந்து 9 மில்லி மீட்டர் நீளமுள்ள துப்பாக்கிகளை பறிமுதல் செய்ததாகவும் தெரிவித்துள்ளனர்.