​​
Polimer News
Polimer News Tamil.
Advertisement
மகளிர் IPL தொடர் எப்போது ? சவ்ரவ் கங்குலி கணிப்பு

Published : Dec 08, 2019 6:16 PM

மகளிர் IPL தொடர் எப்போது ? சவ்ரவ் கங்குலி கணிப்பு

Dec 08, 2019 6:16 PM

மகளிர் ஐ.பி.எல் கிரிக்கெட் தொடர், அடுத்த 4 ஆண்டுகளுக்கு பிறகு நடைபெற வாய்ப்புள்ளதாக பிசிசிஐ தலைவர் சவ்ரவ் கங்குலி தெரிவித்துள்ளார்.

ஆண்கள் ஐபிஎல் தொடர் போலவே பெண்களுக்கும் ஐபிஎல் கிரிக்கெட் தொடர் நடத்தவேண்டும் என ரசிகர்கள் மத்தியில் கோரிக்கைகள் எழுந்துள்ளன. இந்நிலையில் இதுகுறித்து தெரிவித்துள்ள கங்குலி, பெண்கள் ஐபிஎல் தொடரை நடத்துவதில் சில நடைமுறை சிக்கல்கள் உள்ளதாக குறிப்பிட்டார்.

குறிப்பாக, பெண்கள் ஐபிஎல்லுக்கு சுமார் 160 வீராங்கனைகள் வரை தேவைப்படும் நிலையில் 60 வீராங்கனைகள் மட்டுமே தற்போது  இருப்பதாக தெரிவித்தார். இன்னும் 4 ஆண்டுகளுக்கு பிறகு பெண்களுக்கான ஐபிஎல் தொடர் சாத்தியமாக வாய்ப்புள்ளதாகவும் கங்குலி கூறினார்.